எங்கள் கதை

டாக்கிங் யாக் ஹிந்தி மற்றும் தமிழ் பேசுபவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆங்கிலம் கற்பிக்கும் முறை. ஹிந்தியிலும் தமிழிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட பாடங்கள் மூலமும், கற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரின் ஆங்கில அறிவுக்கேற்ப தனிப்பட்டு வடிவமைக்கப்படும் பாடத்திட்டம் மூலமும், டாக்கிங் யாக் பிற வழக்கமான வகுப்பறை முறைகளை விட சுமார் 7 மடங்கு வேகமாகக் கற்பிக்கிறது என நிறுவப்பட்டுள்ளது.

பாடங்களுக்குத் துணையாக ஆயிரக்கணக்கான ஆங்கிலப் பயிற்சிகள், உலகின் மிக மேம்பட்ட ஸ்பீச் ரெகக்னிஷன் / உச்சரிப்பு எஞ்சின், தனித்தன்மையான ஆங்கில விற்பன்னராகும் முறைகள், மற்றும் நேரலையில் ஆங்கிலப் புலமைக்கு உதவும் ஆசிரியர்களும் உண்டு. எங்களுடைய பாடங்கள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

ஹோப் ஃபவுண்டேஷன், பார்க்ளேஸ், டெக் மஹிந்திரா, மற்றும் டெல் போன்ற அரசு சாரா நிறுவனங்கள், பயனாளர்களை அதிவிரைவாக 100% ஆங்கிலம் மட்டுமே புழங்கும் சூழலுக்குத் தயார்படுத்த டாக்கிங் யாக்கை நம்பி இருக்கின்றன. இந்தியா முழுவதும் பல கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்கள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், இன்றைய பலருடன் உரையாட வேண்டிய பணிச்சூழலுக்கு பட்டதாரிகளைத் தயார்படுத்தவும் டாக்கிக் யாக்கைப் பயன்படுத்துகின்றன. பள்ளி மாணவர்கள் வேகமாக வாசித்தல், மேம்பட்ட இலக்கணப் பயன்பாடு, எளிதாக உரையாடும் திறன் மற்றும் தெளிவான நம்பிக்கை நிறைந்த பேச்சு ஆகிய நன்மைகளை அனுபவிக்கிறார்கள். சில மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தின் ஆசிரியர் பயிற்சிகளில் டாக்கிங் யாக்கைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றில் மூன்று மாதங்களில் ஆங்கில அறிவில் 7 நிலை உயர்வைக் கண்டிருக்கிறார்கள்.

ourstory_imageone
பன்னாட்டு நிறுவனங்கள், புதிதாய் தொடங்கப்பட்ட நிறுவினங்கள் மற்றும் சிறு தொழில்களால் நம்பப்படுகிறது.
clientone
clientfour
clienthtree
clienttwo
clienttwo
clienttwo
clienttwo
clienttwo
clienttwo
clienttwo
clienttwo

டாக்கிங் யாக் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது

மிக எளிமையாக, பெங்களூரு சுந்தரமூர்த்தி சாலையில், மூன்று டீச் ஃபார் இந்தியாவில் பணியாற்றிய நபர்களை அங்கமாகக் கொண்ட நான்கு பேர் கொண்ட திறன்மிக்க ஒரு குழு, இந்தியாவில் ஆங்கிலம் கற்பிக்கப்படும் முறையை மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் தொடங்கினார்கள்.

இதுவரை உருவாக்கியதிலேயே திறன்மிக்க, உள்ளுணர்வுக்கு நெருக்கமான, எல்லோரும் எளிதாகப் பெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆங்கிலம் கற்பதில் உள்ள தடைகளை நீக்குவது என்ற பார்க்க எளிமையான ஆனால் அடைவதற்குக் கடினமான ஒரு குறிக்கோளை நோக்கி டாக்கிங் யாக்கிங் பயணிக்கத் தொடங்கியது.

எங்களுடைய முயற்சி பாடத்திட்டம், பாடங்களின் உள்ளீடு, திறன் அறியும் சோதனை மற்றும் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் தகவல் தொடர்பு போன்றவற்றில் ஆழ்ந்த வாசிப்பைக் கோரியது. தொழில்நுட்பம் எவ்வாறு கற்றலை மேம்படுத்த முடியும் என்பதில் தெளிவான புரிதலும், எங்கள் பயனாளர்களான இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆங்கிலம் கற்க விரும்பும் நபரைப் பற்றிய நெருக்கமான புரிதலும் தேவைப்பட்டது

எங்களுக்குப் பங்களித்தவர்கள் இந்த முதற்கட்ட அணி மட்டும் அல்ல. எங்கள் நிறுவனத்தின் வரலாறு முழுவதும், சுமார் நூறு பேரின் பங்களிப்பால் எங்கள் நிறுவனம் பயனடைந்திருக்கிறது. அவர்களில்:

பாடத்திட்ட வடிவமைப்பு, பாடங்கள் எழுதுதல் மற்றும் விளைவுகள் எட்டப்பட்டிருக்கிறதா என்று அறியும் கேள்விகள் எழுதுதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் ஆகியவற்றில் தேர்ந்த எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் வசனம் திருத்துபவர்கள், திரைப்படம் எடுப்பவர்கள் மற்றும் ஒளித்தொகுப்பாளர்கள், ஒலிப் பொறியாளர்கள் மற்றும் ஒலித்தொகுப்பாளர்கள், அசைவூட்ட மற்றும் விளக்கப்படக் கலைஞர்கள், காட்சி வடிவமைப்பாளர்கள், பயணர் அனுபவம் மற்றும் இடைமுகப்பு நிபுணர்கள், நடிகர்கள் (சில தேர்ந்த நகைச்சுவை நடிகர்கள் மற்றும் மேடைக் கலைஞர்கள்), பின்னணிக் குரல் கலைஞரகள், தயாரிப்பாளர்கள், புள்ளியியலாளர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் முதிர்ச்சியான, பொறுப்புள்ள பயில்நிலை ஊழியர்கள் ஆகியோர் அடக்கம். இந்தியாவின் மிகச்சிறந்த மென்பொருள் பொறியாளர்களும் எங்கள் ஆப்புக்கு உயிர் தந்த பணியைச் செவ்வனே செய்தார்கள்.

ourstoryimagetwo
டாக்கிங் யாக் அலுவலகம் மற்றும் கலந்தாய்வு அரங்கம் - இன்று

மேற்குறிப்பிட்டோர் எங்கள் அலுவலகச் சுவர்களுக்கு உள் உதவியவர்கள் மட்டுமே

வெளி உலகில் இருந்தும் எங்களுக்கு பல உதவிகள் கிடைத்தன. நாடு முழுதும் இருக்கிற அரசு சாரா நிறுவனங்கள், பல்கலைக்கழக மற்றும் அரசு அறிவுரையாளர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் இத்துறை ஜாம்பவான்கள் விலைமதிப்பற்ற ஊக்கம், உதவி மற்றும் கருத்துகளை அளித்தார்கள். குறிப்பாக, எங்களைத் தங்கள் கல்வி நிலையங்களுக்கு வரவேற்று ஆய்வு மற்றும் களச் சோதனைகளுக்கு வாய்ப்பளித்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

இதில் பங்களித்த அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவெனில் நம்முடைய கூட்டு முயற்சியின் விளைவாக இந்தியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வழியை நாம் மாற்றியிருக்கிறோம். பல அற்புதங்களை நிகழ்த்துகிறோம்.

என் சார்பாகவும், நிறுவனம் சார்பாகவும், கோடிக்கணக்கான ஆங்கிலம் கற்க விரும்பும் கோடிக்கணக்கானவர்கள் சார்பாகவும் உங்களுக்கு நன்றி

இப்படிக்கு
டாம்


தாமஸ் லாடினோவிச், டாக்கிங் யாக்கின் நிறுவனர். @Home Network, Excite@Home, Matchlogic ஆகிய நிறுவனங்களில் பல்லாண்டு முக்கிய பொறுப்புகள் வகித்தவர் மற்றும் Jingle Networks / 800-FREE411 நிறுவனத்தின் துணை நிறுவனராகவும் இருந்தவர், சுமார் பத்து வருடங்கள், தென்கிழக்காசியா மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து பணிக்காக வட கலிஃபோர்னியா மாகாணத்தின் பொருளாதாரத்தில் நலிந்த பகுதிகளுக்கு வரும் நபர்களுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதில் செலவழித்தார். அவருடைய சிறப்பே 100% ஆங்கிலம் பேசும் சூழல்களில் பணிபுரிய மாணவர்களைத் தயார்செய்வதுதான். 2015 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு வந்து டாக்கிங் யாக்கைத் துவங்கினார்.